தூத்துக்குடி சிவன்கோவில் மற்றும் பெருமாள்கோவில் சுற்றியுள்ள சாலையில் மூன்று இடங்களில் இரும்புக் கதவு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு அப்பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சத்திரம் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் காவல்துறை அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதையடுத்து, போக்குவரத்து சீரடைந்தது.
-பி.கணேசன் @ இசக்கி.