சாலை வசதிக்காக சாலை மறியல் செய்த கிராம பொது மக்கள் : 19 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது!

ye2711P1 ye2711P2 ye2711P3 ye2711P4

ஏற்காடு தாலுக்கா, மாரமங்களம் பஞ்சாயத்தில் உள்ளது செந்திட்டு கிராமம். இந்த கிராம மக்கள் தற்போது ஏற்காடு மற்றும் சேலம் செல்லும் மெயின் ரோட்டை அடைய மாரமங்களம் வழியாக 32 கிலோ மீட்டர் சுற்றி வருகின்றனர்.

ஆனால், இந்த கிராமத்திற்கு செல்ல கொட்டச்சேடு கிராமத்தில் உள்ள லட்சுமி எஸ்டேட் வழியாக சென்றால் 7 கிலோ மீட்டர் மட்டுமே பயணிக்க வேண்டி வரும்.

1995 ஆம் ஆண்டே இந்த வழியில் கிராம மக்கள் செல்லலாம் என கோர்ட் தீர்ப்பு கிடைத்தது.

ஆனால், எஸ்டேட் நிர்வாகம் 19 ஆண்டுகளாக இந்த வழியை மறித்து வைத்திருந்தனர். கிராம மக்களும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அலைந்தும் வழி கிடைக்கவில்லை.

எனவே, இன்று(27.11.2014)  காலை 12 மணிக்கு ஏற்காடு மெயின் ரோட்டில், யூனியன் அலுவலகம் எதிரில்,கிராம மக்கள் 400-க்கும் மேற்ப்பட்டோர் சாலை மறியலில்  ஈடுப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் சாந்தி ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் பி.டி.ஓ. க்கள்  ஜெயராமன், துளசிராமன் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்த போதிலும் கிராம மக்கள் உடன்படனில்லை, மதியம் 2 மணி வரை சாலை மறியல் போராட்டம் நீடித்தது.

பின்னர் உடனடியாக எஸ்டேட்டில் உள்ள வழியை சரிபடுத்தி தருவதாக தாசில்தார் கூறியதை அடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

உடனடியாக தாசில்தார், கிராம மக்கள் மற்றும் காவல் துறையின் உதவியுடன், லட்சுமி எஸ்டேட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு எஸ்டேட் நிர்வாகத்திடம் கோர்ட் தீர்ப்பை காட்டி பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் எஸ்டேட்டில் கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருந்த 3 கேட்டை உடைத்து கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தும் போது எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என தாசில்தார் சாந்தி உத்தரவிட்டு சென்றார். இதனால் 19 ஆண்டுகால பிரச்சனைக்கு  இன்று தீர்வு கிடைத்தது.

நவீன் குமார்.