தூய மரியன்னை கல்லூரி தாவரவியல் துறையின் சார்பாக, மரியன் பொட்டனிக்கா எக்ஸ்போ-2014 கண்காட்சி 26.11.2014 அன்று துறைத்தலைவர் மற்றும் துறை பேராசிரியர்கள் முன்னிலையில், கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் அல்போன்ஸ் ரோஸ்லின் தலைமை உரையாற்றி துவங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கண்காட்சியைப் பார்வையிட்டு பயனடைந்தார்கள்.
கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் தென் தமிழகத்தில் உள்ள அரிய, அழிந்துபோன மற்றும் அழிந்து போகக் கூடிய மூலிகைத்தாவரங்கள் சிறப்பான முறையில் சேகரித்து அதன் விஞ்ஞான தாவரவியல் பெயரோடு பயன்படும் பகுதி மற்றும் பயன்பாடுகளை பார்வையாளர்களுக்கு கண்கவரும் காட்சியாகவும், அறிவுத்திறனை வளர்க்கும் எண்ணத்திலும் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்னும் பழமொழியை தனதாக்கிச் செல்லும் அளவுக்கு படைப்பு இருந்தது.
மேலும், கண்காட்சியை விரிவாக்கும் அளவில் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கடற்பாசி, கடற்புல், சதுப்பு நிலத்தாவரங்கள், அவற்றின் உபயோகங்கள் மாணவர்களை பூரிக்க வைத்தது மட்டுமன்றி அவர்கள் உள்ளங்களில் இவற்றை பாதுகாப்பது தம் கையில் என்ற எண்ணத்துடன் வெளியேறியதை உணர முடிந்தது.
தாவரங்களில் நடக்கும் வேதிமாற்றங்களை துறை மாணவிகள், பள்ளி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் மூலம் எடுத்துரைத்தார்கள்.
இதுமட்டுமன்றி 23 மில்லியன் – 360 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக அழிந்துபோன பாகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேலும், புவி வெப்பமடைதலுக்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பற்றிய குறும்படம் மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது.
-பி.கணேசன் @ இசக்கி.