உத்தரகாண்டின் டேராடூன், ருத்ரபிரயாக், நைனிடால், ஸ்ரீநகர்பாரி ஆகிய இடங்களில் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஜோஷிமத்தில் இருந்து அடிக்கல் நாட்டினார். டேராடூனில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள், மற்ற இடங்களில் தலா 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளும் அமைக்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ், மருத்துவ வசதிகளை மேம்படுத்துவது மற்றும் வலுப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநில அரசு சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தமி, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் திரு தன்சிங் ராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சமோலி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளையும் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
எஸ்.சதிஸ் சர்மா