தூத்துக்குடி, சிதம்பரநகரில் உள்ள பியர்ஸ் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பேஷன் ஷோ நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் சுதாகர் தலைமை தாங்கினார். இதில் குழந்தைகள் டாக்டர், விண்வெளி வீரர், போலீஸ், கலெக்டர், பைலட், விமானப் பணிப்பெண், போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து வந்து ‘எனது லட்சியம்’ என்ற தலைப்பில் உரையாற்றினர்.
விழாவில் தலைமை ஆசிரியை கிரெஸில்டா வரவேற்றார். சர்மிளா பாஸ்கர், டயானா சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
தொடர்ந்து குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
-பி.கணேசன் @ இசக்கி.