ஏற்காட்டில் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர்கள் சங்க கல்வெட்டு திறப்பு மற்றும் சங்க கொடியேற்ற விழா, ஏற்காடு வட்ட தலைவர் பரமேஷ் தலைமையில் நடைப்பெற்றது.
விழாவில் மாநில தலைவர் ராஜசேகர் கல்வெட்டை திறந்து வைத்தார். மாநில பொதுச் செயலாளர் தமிழ்செல்வன் கொடியேற்றி வைத்தார். மாநில பொருளாளர் ரவிசந்திரன் சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் தனியார் தங்கும் விடுதியில் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் மார்ச் மாதம் காஞ்சிபுரத்தில் மாநில மாநாடு நடத்துவது, கிராம உதவியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி உயர்வு வழங்குவது, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குவது, பொங்கல் போனஸ் சதவீத அடிப்படையில் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட பிரச்சார குழு தலைவர் செந்தில் குமார், மோகன், ராஜா, சங்கர், ரவி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து கலந்துக்கொண்டனர்.
–நவீன் குமார்.