புதுதில்லியில் உள்ள செங்கோட்டை, பிரதமர் அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் வண்ணஒளிக் காட்சி (PROJECTION MAPPING) ஏற்பாடு செய்யப்பட்டது

பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்னோடி வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் 100 அத்தியாயங்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், கலாச்சார அமைச்சகம் இந்தியா முழுவதும் 13 பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் ஒரே நேரத்தில் வண்ணஒளிக் காட்சி (PROJECTION MAPPING) நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சி சாதாரண இந்தியர்களின் உத்வேகம் தரும் கதைகள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்தைக் கொண்டாடியது.

அக்டோபர் 3, 2014 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, மனதின் குரல்  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி (AIR) மற்றும் தூர்தர்ஷன் (DD) ஆகியவற்றில் ஒளிபரப்பப்படுகிறது. 

20-25 நிமிடங்கள் நீடித்த இந்த சிறப்பு நிகழ்ச்சி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்ற கருப்பொருளில் உருவானது. மக்களை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு இடமும் பாரம்பரியம் மற்றும் வரலாற்று மதிப்பினை  எடுத்துக்காட்டுகிறது. புதுதில்லியில் செங்கோட்டை மற்றும்  பிரதமர் அருங்காட்சியகம், ஒடிசாவில் சூரியன் கோயில், ஹைதராபாத்தில் கோல்கொண்டா கோட்டை, தமிழ்நாட்டின் வேலூர் கோட்டை, மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா, ஜார்க்கண்டில் உள்ள நவரத்னகர் கோட்டை, ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள ராம்நகர் கோட்டை அஸ்ஸாமில் உள்ள கர், லக்னோவில் உள்ள ரெசிடென்சி கட்டிடம், குஜராத்தின் சன் மோதேரா, மற்றும் ராஜஸ்தானில் உள்ள சித்தோர்கர் கோட்டை மோதேராவில் உள்ள கோயில் உள்ளிட்ட 13 தளங்கள் இதில் அடங்கும்.

வண்ணஒளிக் காட்சி (PROJECTION MAPPING) நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறக்கப்பட்டன. மேலும் அந்த இடங்களில்  மாலைப் பொழுதை மறக்க முடியாததாக மாற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் இடம்பெற்றன. பங்கேற்பாளர்கள் மனதின் குரலின் முந்தைய நிகழ்ச்சிகளையும் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதோடு தங்கள் யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூடாரத்தில் சுய படங்களை எடுத்துக் கொள்ளவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வு இந்தியாவின் பன்முகத்தன்மை, கலாச்சாரம் மற்றும் முன்னேற்றத்தின் உண்மையான கொண்டாட்டமாகும்.

எம்.பிரபாகரன்

Leave a Reply