பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கப்பட்ட “மிஷன் கர்மயோகி”, குறிப்பாக அரசு அதிகாரிகளின் திறன் மேம்பாட்டு செயல்முறையை நிறுவனமயமாக்கியது- டாக்டர் ஜிதேந்திர சிங்.

2047 ஆம் ஆண்டின் இந்தியாவை வடிவமைக்கும் நோக்கத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட “மிஷன் கர்மயோகி”,  அரசு அதிகாரிகளின்  திறன் மேம்பாட்டிற்கான செயல்முறையை நிறுவனமயமாக்கியுள்ளது என்று மத்திய  அறிவியல் & தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பிரதமர் அலுவலகம்,  பணியாளர்கள், பொதுமக்கள்  குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

ஐஜிஓடி கர்மஷாலா 2023 – ஆலோசனை கருத்தரங்கில்  உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், புதிய இந்தியா என்ற பிரதமர் நரேந்திர மோடியின் இலக்கை அடையவும், அதன் அபிலாஷைகளை நிறைவேற்றவும்,  “ஆட்சி” என்பதில் இருந்து “பங்களிப்பு”க்கு மாறுவது இன்றியமையாத தேவை என்று கூறினார்.

வளர்ந்த பாரதத்திற்கு வழி வகுக்கும், சீர்திருத்தப்பட்ட சிவில் சேவைக்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு மிஷன் கர்மயோகி உறுதிப் பூண்டுள்ளதாகவும், சுறுசுறுப்பாக,  திறம்பட நிர்வாகத்தை உருவாக்குவதில் மிஷன் கர்மயோகி உருமாற்றப் பங்காற்றி வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங், ஐஜிஓடி கர்மயோகி தளத்தில்  தீவிரமாகப் பங்கேற்ற  அமைச்சகங்கள்/துறைகளை பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள், அமைச்சகங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply