மத்திய மாநில அரசுகள், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த தமிழக மருத்துவ மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்க்கு அனுமதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல் .

ஜி.கே.வாசன்.

மத்திய மாநில அரசுகள், தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த மாணவரகள் விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த மாணவர்கள் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக, 2020 ல் இந்தியா திரும்பினர்.

இந்நிலையில் அவர்கள் படித்த கல்லூரியின் ஆன்லைன் வகுப்பின் மூலம் படித்து படிப்பை முடித்தனர். பிறகு தேசிய மருத்துவ கவுன்சில் நடத்திய வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி (FMGE) என்ற கடினமாக தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் மீண்டும் படிப்பை தொடர சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு செல்ல முடியவில்லை என குறை கூறுகின்றனர்.

ஆன்லைன் வகுப்பு காரணமாக, தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஒரு வருடத்திற்குப் பதிலாக இரண்டு வருடங்கள் CPRI (Compulsory Rotating Medical Internship) எனப்படும் இன்டர்ன்ஷிப் (பயிற்சி மருத்துவராக) செய்ய வேண்டும்.

2022ஆம் ஆண்டு ஜூன் 30 அம் தேதிக்கு முன் அல்லது அன்றைய படிப்பை முடித்தவர்களுக்கு இன்டர்ன்ஷிப் (பயிற்சி மருத்துவராக) வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. இதன்படி ஒவ்வொரு மாநில மருத்துவக் கவுன்சிலும் விதியை பின்பற்றுவதால், அந்தந்த மாநிலங்களில் இரண்டு வருடங்களாக மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஆனால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், தமிழ்நாட்டின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி மாணவர்களை தமிழகத்தில் இன்டர்ன்ஷிப் (பயிற்சி மருத்துவராக) செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் மருத்துவ மாணவர்கள் படிப்பில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதாவது தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப்க்காக (பயிற்சி மருத்துவராக) ஒரு வருடத்திற்கும் மேலாக சுமார் 600 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழக மருத்துவ மாணவர்கள் இன்டர்ன்ஷிப் (பயிற்சி மருத்துவராக) செய்ய தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அனுமதி தர முன்வர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

எனவே மத்திய மாநில அரசுகள், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த தமிழக மருத்துவ மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்க்கு அனுமதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply