உறுப்பு தானங்கள் மற்றும் உறுப்பு மாற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உறுப்புதானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் தொலைநோக்கு அடிப்படையிலான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் வரும் என்று கூறினார்.
நாடு முழுவதும் உறுப்பு மாற்று சிகிச்சைகள் 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு 5000-த்திற்கும் குறைவாக இருந்த உறுப்பு தானம் 2022-ம் ஆண்டு 15,000-த்திற்கும் மேலாக இருந்தது. 2016-ம் ஆண்டு இறந்து போன 930 பேரிடமிருந்து 2265 உறுப்புகள் பயன்படுத்தப்பட்டதாகவும் 2022-ம் ஆண்டு இறந்துபோன 904 பேரிடமிருந்து 2765 உறுப்புகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உறுப்பு தானம் செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பாக 42 நாட்களை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா