புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கின் மூலம் உலகளாவிய வாயு உமிழ்வை குறைக்க வேண்டியது அவசியம் என்ற பீட்டர்ஸ்பெர்க் பருவநிலை உரையாடல் குறித்து ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்த வேண்டும்: பூபேந்தர் யாதவ்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கின் மூலம் உலகளாவிய வாயு உமிழ்வை குறைக்க வேண்டியது அவசியம் என்ற பீட்டர்ஸ்பெர்க் பருவநிலை உரையாடல் குறித்து ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். தரமான மற்றும் எரிவாயு மாற்றத்தை உள்ளடக்கிய அணுகுமுறை தேவை என்பதை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வலியுறுத்துவதாக தமது ட்விட்டர் பதிவில் மேற்கோள் காட்டியுள்ளார்.

பசுமை எரிவாயு வழித்தடத்தை கடைப்பிடிப்பதன் வாயிலாக உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும் என்றும் அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்து வரும் நாடுகளில் வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், பருவநிலை மாறுபாட்டின் தாக்கங்கள், அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரு.பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

திவாஹர்

Leave a Reply