ஜம்மு & காஷ்மீரின் ரஜோரியில் உள்ள ராணுவ தள முகாமில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆய்வு.

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று  ஜம்மு & காஷ்மீரின்   ரஜோரியில் உள்ள ராணுவத் தள முகாமுக்குச் சென்று, இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்தார். ஜம்மு & காஷ்மீரின்   துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா,  ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, வடக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி ஆகியோர் உடனிருந்தனர்.

வீரர்களுடன் உரையாடிய பாதுகாப்பு அமைச்சர்,  சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றும் அவர்களின் வீரத்தையும், ஆர்வத்தையும் பாராட்டினார். கடினமான பகுதிகளில் இந்திய ராணுவ வீரர்களின் ஈடு இணையற்ற தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் நிலையான விழிப்புணர்வின் காரணமாக தேசம் பாதுகாப்பாக இருப்பதாக அவர் கூறினார்.  அதே அர்ப்பணிப்புடனும், துணிச்சலுடனும் தொடர்ந்து பணியாற்ற அவர்களை ஊக்குவித்த அவர், அரசும் நாட்டு மக்களும் எப்போதும் ஆயுதப்படைகளுடன் இருப்பதாகக் கூறினார்.

 ரஜோரியில் தேசத்திற்கான சேவையில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு திரு ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார். அவர்களின் தியாகம் ஒருபோதும் மறக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply