எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) அதன் 64வது நிறுவன தினத்தை இன்று கொண்டாடுகிறது. இதனையொட்டி, புனேயில் உள்ள பிஆர்ஓ மையத்தில் ‘தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உபகரண மேலாண்மை மாநாடு’ என்ற முக்கிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் கலந்து கொண்டார். இந்த நாளைக் குறிக்கும் வகையில், அங்கு தொழில்நுட்பப் பயிற்சி வளாகம் மற்றும் தானியங்கி ஓட்டுநர் தடம் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். இந்த வசதிகள் பிஆர்ஓ பணியாளர்களின் பயிற்சித் தரத்தை மேம்படுத்துவதோடு, பல்வேறு சவால்களுக்கு அவர்கள் சிறப்பாக தயாராக இருக்கவும் உதவும்.
‘டிஜிட்டல் இந்தியா’ முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பிஆர்ஓ – மையப்படுத்தப்பட்ட மென்பொருளும் இந்த விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மென்பொருள் – ஆட்சேர்ப்பு மேலாண்மை அமைப்பு, மின்னணு அளவீட்டு புத்தகம் & பணி மேலாண்மை அமைப்பு உள்ளிட்டவற்றை செயல்திறனோடு இயக்க வழிவகுக்கும்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அஜய் பட், பிஆர்ஓ பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைப் பாராட்டினார். அவர்களால் கட்டப்பட்ட சாலைகள், பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சமூக – உறுதிப்படுத்தலுக்கும் உதவியுள்ளன. எல்லைப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி. சேலா சுரங்கப்பாதை மற்றும் நெச்சிபு சுரங்கப்பாதை திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்தும் அவர் திருப்தி தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் ‘புதிய இந்தியா’ முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னேறி வருவதாக அவர் கூறினார்.
எல்லைச் சாலைகள் அமைப்பின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் சௌத்ரி பேசுகையில், தொடர்ந்து வீரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றுமாறு அனைத்துத் தரப்பினரையும் அறிவுறுத்தினார்.
பிஆர்ஓ, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, இந்தியாவின் எல்லைகள் மற்றும் பூட்டான், மியான்மர், ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளிலும் சவாலான சூழ்நிலையில் 61,000 கிமீ சாலைகள், 900 க்கும் மேற்பட்ட பாலங்கள், நான்கு சுரங்கங்கள் மற்றும் 19 விமானநிலையங்களை கட்டமைத்துள்ளது.
திவாஹர்