தமிழ்நாட்டுப் பள்ளிகளில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்களின் வருங்கால உயர்கல்விக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டப் பள்ளிகளில் படித்து, தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் 97.85% தேர்ச்சி சதவீதத்துடன் விருதநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது பெருமைக்குரியது.
காரணம் பெருந்தலைவர் பிறந்த மண் விருதுநகர் மாவட்டம். அதாவது பெருந்தலைவர் தான் தான் கல்விக்கு அன்றே வித்திட்டவர். அவர் போட்ட அடித்தளத்தால் தான் மாநிலத்தில் கல்வி வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று, முதலிடம் வகிப்பது பெருந்தலைவருக்கு புகழ் சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. இந்நிலை வருங்காலங்களிலும் தொடர வேண்டும். இதன் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் படிக்கும் மாணவ, மாணவிகள் வருங்காலங்களில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.
எனவே பெருந்தலைவர் காமராஜர் வழியில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, மாணவச் செல்வங்கள் நன்கு கல்வி கற்று, தேர்ச்சி பெற்று, உயர்கல்வி கற்று, வேலை வாய்ப்பு பெற்று, வாழ்வில் சிறக்க, வளமான தமிழகம் அமைய இறைவன் துணை நிற்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி.கார்த்திகேயன்