சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலத்தில் மே 8, 2023 வரை ரூ. 375.61 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இது கடந்த 2018 சட்டமன்ற தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட (ரூ. 83.93 கோடி) 4.5 மடங்கு கூடுதலாகும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ. 147.46 கோடி ரொக்கம், ரூ. 96.60 கோடி மதிப்புள்ள விலை மதிப்பிலான உலோகங்கள், ரூ. 24.21 கோடி மதிப்பில் இலவசப் பொருட்கள், ரூ. 83.66 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ. 23.67 கோடி மதிப்பில் போதைப் பொருட்கள் உள்ளிட்டவை இந்த பறிமுதலில் அடங்கும்.
மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருந்த பயணத்திற்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் வரை பல்வேறு அமலாக்க முகமைகளால் ரூ. 83.78 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பிறகு ரூ. 288 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிர்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கோவா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளாவின் எல்லைப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து கடந்த மே 1-ஆம் தேதி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்திருந்தது, குறிப்பிடத்தக்கது.
எம்.பிரபாகரன்