கலைஞர் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டதற்கு மூளையாக இருந்தவர் தி.மு.க. எம்.பி., கனிமொழி! ஆ.ராசாவின் கூடுதல் தனிச்செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி அளித்த சாட்சியமும், அவரிடம் கனிமொழி தரப்பு வழக்கறிஞர் ரெபிக்கா ஜான் நடத்திய குறுக்கு விசாரணையும்!- முழுமையான விபரம்!

kalaignar tv office kanimozi

கலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில்  தி.மு.க. எம்.பி., கனிமொழிக்கு முக்கிய பங்கு இருந்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச்செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.

 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அவர் அளித்த சாட்சியத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஓ.பி.ஷைனி

நீதிபதி ஓ.பி.ஷைனி

2ஜி ஊழல் மற்றும் அது தொடர்பான முறைகேடான பணபரிமாற்றம் தொடர்பான வழக்குகள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றச் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் தற்போது, சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள, ஆ.ராசாவின் கூடுதல் தனி செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி 05.12.2014 அன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதனால் 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

Aseervatham Achary

Aseervatham Achary

ஆசீர்வாதம் ஆச்சாரி அளித்த சாட்சியத்தில், கலைஞர் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டதற்கு மூளையாக இருந்தவர் தி.மு.க. எம்.பி., கனிமொழி. இது தொடர்பாக அப்போது மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை அவரது அலுவலங்களுக்கு சென்று, கனிமொழி அடிக்கடி சந்தித்தார். ஆ.ராசாவின் கூடுதல் செயலாளர் என்ற முறையில் இந்த சந்திப்பின் போது நானும் உடன் இருந்தேன்.

கலைஞர் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டதில் கனிமொழிக்கு மிகப் பெரிய பங்கு இருந்ததால், அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் செய்திகள் கலைஞர் தொலைக்காட்சியில் அதிக அளவில் ஒளிபரப்பப்பட்டது. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன என தெரிவித்துள்ளார்.

ஆசீர்வாதம் ஆச்சாரியை குறுக்கு விசாரணை செய்த கனிமொழி தரப்பு வழக்கறிஞர் ரெபிக்கா ஜான், பா.ஜ.க.வும், சுப்ரமணியன்சாமியும், தங்களின் அரசியல் விளையாட்டுக்கு ஆசீர்வாதம் ஆச்சாரியை பயன்படுத்தி இது போன்று பொய் சாட்சியம் அளிக்க செய்துள்ளனர். பா.ஜ.க. இந்த வழக்கை அரசியலாக்க முயற்சிக்கிறது என்றார்.

ஆனால், ரெபிக்கா ஜானின் இந்த குற்றச்சாட்டை, ஆசீர்வாதம் ஆச்சாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆ.ராசாவிடம் கூடுதல் தனி செயலாளராக இருந்து, பின் 2014 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பா.ஜ.க.வில் இணைந்தவர் தான் இந்த ஆசீர்வாதம் ஆச்சாரி. இவர் பா.ஜ.க.வில் சேர்வதற்கு முக்கிய காரணம் சுப்ரமணியன்சாமி. 

சுப்ரமணியன்சாமியின் நீண்டகால நண்பரான ஆசீர்வாதம் ஆச்சாரி, சுப்ரமணியசாமியின் வழிகாட்டுதலின் பேரிலேயே பா.ஜ.க.வில் முறைப்படி தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

ஆ.ராசாவின் கூடுதல் தனிச்செயலாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி அளித்த சாட்சியமும், அவரிடம் கனிமொழி தரப்பு வழக்கறிஞர் ரெபிக்கா ஜான் நடத்திய குறுக்கு விசாரணையும்!- நமது வாசகர்களின் மேலானப் பார்வைக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in

1 2 3 4 5

 6 7 9 10

  
11 12 13 14 15                                      16 17 18 19 20 21

 -டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in