ஆழ்கடல் இயக்கத்தின் முதலாவது வழிகாட்டுதல் குழு கூட்டத்திற்கு மத்திய அறிவியல், தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார். புதுதில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய அவர், எதிர்காலத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு நீலப்பொருளாதாரம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கும் என்று கூறினார்.
மத்திய அரசின் நீலப்பொருளாதார முன்னெடுப்பின் ஒரு பகுதியாக ஆழ்கடல் இயக்கம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடலில் உள்ள வளங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக பல்வேறு அமைச்சகங்கள் உள்ளிட்ட உயர்நிலை அமைப்பாக ஆழ்கடல் இயக்கம் உள்ளது. இதில் நீலப்பொருளாதார வரும் ஆண்டுகள் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியிலுமை் முக்கிய பங்கு வகிக்கும்.
இக்குழுவில் சுற்றுச்சூழல், வெளியுறவு விவகாரம், பாதுகாப்பு மற்றும் நிதித்துறையின் மத்திய இணையமைச்சர்கள், நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
எஸ்.சதிஸ் சர்மா