பாதுகாப்புத் துறையில் ‘தற்சார்பு இந்தியா’: ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட 4 வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்புத் துறையில் ‘‘தற்சார்பு இந்தியா’’வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன்  ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட  4வது ஆக்கபூர்வ  உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சாதனங்களின் விவரங்கள் ஸ்ரீஜன் இணையப்பாக்கத்தில்  (https://srijandefence.gov.in/) கிடைக்கின்றன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகே இவை இந்தியத்  தொழில்துறையிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.

இந்த நான்காவது உள்நாட்டு மயமாக்கல் பட்டியல் (பிஐஎல்) மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் தொடர்பாக  2021 டிசம்பர், 2022 மார்ச், 2022 ஆகஸ்ட் என ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல்களின் தொடர்ச்சியாகும். ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 1,238  (351+107+780) சாதனங்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்நாட்டுமயம் ஆக்கப்படவுள்ளன. இவற்றில் 310 சாதனங்கள் (1வது பிஐஎல் – 262, 2வது பிஐஎல் – 11, 3வது பிஐஎல் – 37) இதுவரை உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன.

திவாஹர்

Leave a Reply