மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் திங்கள் அன்று நடைபெறும் சட்ட வரைவு பயிற்சி நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் திங்கட்கிழமை, 15 மே, 2023 அன்று நடைபெறும் சட்ட வரைவு பயிற்சி நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற ஆய்வுகள் நிறுவனமும், பாராளுமன்ற ஆய்வு மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கான ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. இதன் நோக்கம் பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், பல்வேறு அமைச்சகங்கள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் இதர அரசு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளுக்கு சட்ட வரைவு குறித்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான புரிதலை வழங்குவதாகும்.

மாநிலம் மற்றும் சமூக நல்வாழ்விற்காக செயல்படுத்தப்படும் கொள்கைள் மற்றும் திட்டங்கள் குறித்த முழுமையான தாக்கத்தை பெறுவதற்கு சட்ட வரைவு பயன்படும். சட்ட வரைவாளர்கள் தான் சட்ட வரைவை தயார் செய்வதற்கு பொறுப்பாகிறார்கள். ஜனநாயக முறையிலான ஆட்சி அதிகாரம் செய்வதற்கும் சட்டத்தின்பால் நடவடிக்கையை மேற்கொள்ளப்படுவதற்கும் இதுவே அடிப்பைடையாகும். குறிப்பிட்ட காலக்கட்ட இடைவெளியில் இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருவதன் மூலம் அவர்களது திறன் மேம்படுகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply