மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர். வீரேந்திர குமார் இன்று ஜபல்பூரில் “தேசிய கல்விக் கொள்கை: 2020-ன் பின்னணியில் மாற்றுத் திறனாளித் துறையில் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திறன் மேம்பாடு” குறித்த தேசியப் பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். இந்திய மறுவாழ்வு கவுன்சில் ஏற்பாடு செய்த இந்தப் பயிலரங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் இலக்குகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
தொடக்க அமர்வின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை எதிரொலிக்கும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு சுயமரியாதை, அதிகாரம் மற்றும் கண்ணியம் வழங்குவதன் முக்கியத்துவத்தை டாக்டர் வீரேந்திர குமார் வலியுறுத்தினார்.
கொள்கை வகுப்பாளர்கள், சிறப்புக் கல்வியாளர்கள் மற்றும் மறுவாழ்வு வல்லுநர்கள் உட்பட 11 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினரும் கௌரவ விருந்தினருமான திரு ராகேஷ் சிங், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதாயமான வேலைவாய்ப்பை எளிதாக்க ஜபல்பூர் மாவட்டத்தில் திறன் பயிற்சித் திட்டங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிக்கும் துறையின் செயலாளரும், ஆர்சிஐயின் தலைவருமான திரு ராஜேஷ் அகர்வால், துணை இயக்குநர் டாக்டர் சுபோத் குமார் உள்ளிட்டோர் பயிலரங்கின் நோக்கத்தை விளக்கினர்.
எம்.பிரபாகரன்