சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து மத்திய நிலக்கரி அமைச்சக செயலாளர் ஆய்வு.

சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். தென்கிழக்கு மத்திய ரயில்வே அதிகாரிகளிடம் சத்தீஸ்கர் கிழக்கு ரயில்வே நிறுவனம் மற்றும் கிழக்கு மேற்கு ரயில்வே நிறுவன திட்டங்களின் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். சிறப்பு நோக்க அமைப்பு மாதிரியில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு ரயில் வழித்தடங்களின் பணிகளின் விவரங்களையும் கேட்டறிந்தார்.

தென்கிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த பல்வேறு விசயங்கள் பற்றி விவாதிப்பதற்காக சத்தீஸ்கர் அரசின் தலைமைச் செயலாளர் திரு அமிதாப் ஜெயினுடன் அமைச்சக செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்த நிறுவனத்தின் கேவ்ரா மெகா திட்டம், நாட்டிலேயே முதன் முறையாக 50 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து அண்மையில் சாதனை புரிந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி சுரங்கமாக இதனை உயர்த்துவதற்காக 70 மில்லியன் டன்னாக உற்பத்தியை விரிவுபடுத்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநில அரசு மற்றும் இதர பங்குதாரர்களின் ஒத்துழைப்போடு திட்டங்களை உரிய காலத்தில் திறம்பட நிறைவேற்றுவதன் அவசியத்தை திரு அமரித் லால் மீனா வலியுறுத்தினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply