நிலக்கரி உற்பத்தி 2023 மே மாதத்தில் 76.26 மில்லியன் டன் அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளது .

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 2023 மே மாதத்தில் 76.26 மில்லியன் டன் அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தைவிட 7.10 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 71.21 மில்லியன் டன்னாக இருந்தது. இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 2023 மே மாதத்தில் 59.94 மில்லியன் டன்னாக இருந்தது. இது கடந்த ஆண்டைவிட 9.54 சதவீதம் அதிகமாகும். கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் 54.72 மில்லியன் டன் அளவிற்கு அந்நிறுவனம் நிலக்கரியை உற்பத்தி செய்தது. தடையற்ற நிலக்கரி போக்குவரத்தை உறுதி செய்ய பிரதமரின் விரைவு சக்தித் திட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகம் மூலம் ரயில் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply