சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் (எஸ்ஜிபிசி) மூத்த பிரதிநிதிகள் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷாவை இன்று புதுதில்லியில் சந்தித்தனர்.
குருத்வாராக்களின் செயல்பாடுகள் மற்றும் எஸ்ஜிபிசி குழுவின் நிர்வாகத்தின் கீழ் குருத்வாராக்களை சேர்ப்பது உள்ளிட்ட பிற விஷயங்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதிநிதிகள் அமைச்சரிடம் மனு அளித்தனர். இது குருத்வாராக்களின் நிர்வாகத்தை சீரமைக்கும் என்று தூதுக்குழு கருதுகிறது. இந்த விவகாரங்களில் மத்திய அரசு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கும் என தலைவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
திவாஹர்