ரயில்வே மூத்த அதிகாரிகள் 24×7 நேரமும் உதவி எண் 139 தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பார்கள்
இரயில்வே உதவி எண் 139 இன் நோக்கம், இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சரியான, திருப்திகரமான தகவலை வழங்க உதவுவதாகும்
ஒடிசாவில் ஏற்பட்ட சோகமான ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினர்/நண்பர்கள்/உறவினர்கள் மற்றும் விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு வசதியாக இந்திய ரயில்வே உதவி எண் 139 இல் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மூத்த அதிகாரிகள் குழு 24X7 நேரமும் உதவி எண்ணை நிர்வகித்து வருகிறது. மேலும் மண்டல ரயில்வே மற்றும் மாநில அரசுடன் ஒருங்கிணைக்கப்பட்டு அழைப்பாளர்களுக்கு தொடர்புடைய அனைத்து விவரங்களையும் வழங்கும். இந்த சேவை தடையின்றி தொடரும். ரயில்வே அமைச்சரால் அறிவிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட உதவித் தொகையை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யும். இறப்பு ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாயும் பலத்த காயங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், சிறிய காயங்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இரயில்வே உதவி எண் 139 இன் நோக்கம், இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு சரியான திருப்திகரமான தகவலை வழங்கி உதவுவதாகும்.
இதுவரை ரயில்வே துறை 285 பேருக்கு (11 உயிரிழந்தோரின் குடும்பத்தினர், 50 கடுமையான காயமடைந்தோர், 224 சிறிய காயமடைந்தோருக்கு) 3.22 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கியுள்ளது. இந்திய ரயில்வே 7 இடங்களில் (சோரோ, காரக்பூர், பாலசோர், காந்தபாரா, பத்ரக், கட்டாக், புவனேஸ்வர்) உதவித் தொகையை வழங்குகிறது.
திவாஹர்