அசாமில் ரூ.1450 கோடி மதிப்பிலான 4 திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

அசாமில் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா  சர்மா தலைமையில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்,  நாகோன் புறவழி-தெளியாகான், தெளியாகான்-ரங்காகரா  4 வழிச்சாலையை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி திறந்து வைத்தார். மங்கள்டாய் புறவழி, தபோகா-பரக்குவா இடையே 4 வழிச்சாலை ஆகியவற்றிற்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த 4 திட்டங்களுக்காக  1450 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நாகோன் புறவழி – தெளியாகான் மற்றும் தெளியாகான் –ரங்காகரா  இடையேயான 18 கிலோ மீட்டர் தொலைவிலான 4 வழி சாலை ரூ.403 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை 15-ல் உள்ள மங்கள்டாயில் ரூ. 535 கோடி செலவில்  அமைக்கப்படும் 15 கிலோ மீட்டர் புறவழிச்சாலை அசாம், மேற்குவங்கம், அருணாச்சலப்பிரதேசம் இடையே போக்குவரத்தை மேம்படுத்தும்.

எஸ்.சதிஷ் சர்மா

Leave a Reply