திருச்சி மாவட்டம், முசிரி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் முன்னாள் தேசிய மாணவர் படை மாணவர்கள் 4 – ஆம் ஆண்டு ஒருங்கிணைப்பு விழா மிகச் சிறப்பாக கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தேசிய மாணவர்படை அலுவலர் முனைவர் ஆர்.பிச்சுமணி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர். கே.கூடலிங்கம் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக குளித்தலை சுபசக்தி கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆர்.கதிரேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவிற்கு முன்னாள் மாணவியும், காவல்துறை உதவி ஆய்வாளருமான ஜெ.சத்யா வரவேற்புரை நிகழ்த்தினார்.
முன்னாள்மாணவரும்,ஒருங்கிணைப்பாளருமான எம்.பாலமுருகன் நன்றியுரை வழங்கினார்.
திரைத்துறையில் புகழ் பெற்ற டவுட் செந்தில் கலந்து கொண்டு தன்னை முன்னாள் மாணவர் அமைப்பில் ஒருங்கிணைத்து கொண்டார்.
இவ்விழாவில் 200- க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை ஒருங்கிணைந்தனர்.
– பி. மோகன்ராஜ்.