உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் ரூ.2,200 கோடி மதிப்புள்ளதியோரியா பகுதியில் ரூ.6,215 கோடி மதிப்பிலான 5 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் திரு நிதின் கட்கரி இன்று அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு நிதின் கட்கரி, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் முன்னேற்றத்தின் புதிய பாதையை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.இந்தத் திட்டங்கள் உத்தரப்பிரதேசத்தில் முதலீட்டை ஊக்குவிக்கும் என்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.பிரதாப்கரில் இருந்து சுல்தான்பூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 330-ன் 43 கி.மீ. சாலை ரூ.1290 கோடி செலவில் விரிவுபடுத்தப்படுவதால் அயோத்யா வழியாக பிரயாக்ராஜில் இருந்து பிரதாப்கர் வரையிலான பயண நேரம் குறையும் என்று அவர் கூறினார்.
திவாஹர்