மங்கோலியாவில் எக்ஸ் கான் க்விஸ்ட் 2023 என்ற 20-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளும் ராணுவ கூட்டுப் பயிற்சி இன்று தொடங்கியது. மங்கோலியாவில் இப்பயிற்சியை அந்நாட்டு அதிபர் திரு உக்நாகின் குரேல்சுக் தொடங்கிவைத்தார். மங்கோலிய ராணுவப் படை, அமெரிக்க ராணுவ பசிபிக் படை ஆகியவை இணைந்து இப்பயிற்சியை நடத்துகின்றன.
இப்பயிற்சியில் கார்வார் ரைஃபிள்ஸ் பிரிவிலிருந்து இந்திய ராணுவக் குழு பங்கேற்றுள்ளது. 14 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, ஐநா அமைதிப்படைக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்டவை நடைபெற உள்ளன. ராணுவ நடவடிக்கைகளை மேம்படுத்துவது, அமைதி நடவடிக்கைகளை பராமரிக்கும் திறன் எதிர்காலத்தில் ஐநா பாதுகாப்புப் படையில் இடம் பெறுவோரைத் தயார் படுத்துதல் ஆகியவை இக்கூட்டுப் பயிற்சியில் இடம் பெற உள்ளன.
எம்.பிரபாகரன்