நம் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக யோகா திகழ்கிறது; இது ஒட்டுமொத்த மனித சமுதாய நலனுக்கானது !– ஜக்தீப் தன்கர்.

உடல், மனம், ஆன்மா ஆகியவற்றை யோகா ஒருங்கிணைக்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். இந்த பழங்கால அறிவியல் தனிநபர்களின் நலன்களில் மட்டும் கவனம் செலுத்தாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன்களிலும் அக்கறை கொள்வதாக கூறினார்.

மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இன்று நடைபெற்ற 9-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர்,  யோகா பயிற்சி என்பது ஒரே நாளில் கொண்டாடப்படும் சிறப்பு தினமாக இல்லாமல் மக்களின் அன்றாட வாழ்வில் இது ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்று குறிப்பிட்டார். ஐ.நா பொதுச்சபையின் 69-வது கூட்டத்தின் போது ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்த பிரதமர், நரேந்திர மோடியின் பங்களிப்பை அவர் பாராட்டினார். இதன் மூலம் இந்த பரிந்துரை 193 நாடுகளால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டினார். இந்தியாவின் முயற்சியின்  விளைவாக யோகா தினம் உலகத் திருவிழாவாக அமைந்துள்ளது என்று திரு ஜக்தீப் தன்கர் குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply