இந்திய – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு விரைவு சூழல் (இன்டஸ் எக்ஸ்) அமெரிக்காவின் வாஷிங்டனில் தொடங்கப்பட்டது.

இன்டஸ்  எக்ஸ் நிகழ்ச்சி, இந்திய – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு விரைவு சூழல் (இன்டஸ் எக்ஸ்) அமெரிக்காவின் வாஷிங்டனில் 2023- ஜூன் 21 அன்று தொடங்கப்பட்டது. பாதுகாப்புத் திறனுக்கான புதுமைக் கண்டுபிடிப்புகள், (ஐடெக்ஸ்), பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியை அமெரிக்க – இந்திய வர்த்தக் குழுமம் நடத்தியது.

2023, ஜூன் 20, 21 ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற இந்த  இன்டஸ் எக்ஸ் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சக இணைச்செயலாளர் திரு அனுராக் பாஜ்பாய் தலைமையில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்திய –அமெரிக்க அரசு பிரதிநிதிகள், பாதுகாப்பு புத்தொழில் துறையாளர்கள், நிறுவன பிரதிநிதிகள், சிந்தனையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு  2023, ஜூன் 20 அன்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு எரிக் கர்செட்டி முக்கிய உரையாற்றினார்.

ஜூன் 21 அன்று நடைபெற்ற நிகழ்வில் அமெரிக்க விமானப்படைத் தலைவர் திரு ஃபிரான்க் கென்டல் பேசியபோது, இந்திய – அமெரிக்க நட்புறவு பெரும் வளர்ச்சியடைந்து வருவதாக குறிப்பிட்டார். விண்வெளி, செயற்கை நுண்ணறிவு உட்பட ஆழ்தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்புகளில் இருநாடுகளின் புத்தொழில்  சூழலுக்கு சிறந்த வாய்ப்புள்ளதாக  அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய திரு அனுராக் பாஜ்பாய், அமெரிக்க – இந்திய  உறவின் எதிர்கால முதலீடு குறித்து வரவேற்பு தெரிவித்தார்.  வாஷிங்டனில் உலகின் இரண்டு மிகப்பெரிய பழமையான ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் சந்தித்துக்கொள்ளும் சூழலில் இந்நிகழ்வுக்கு இது சரியான தருணம் என்று குறிப்பிட்டார்.  தொழில்துறை, கல்வி, முதலீடு ஆகியவற்றின் எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை கண்டறியுமாறும், பங்கேற்பாளர்களை அவர்  கேட்டுக்கொண்டார். உலகிற்கான இந்தியாவில் தயாரிப்போம் தத்துவம், தற்சார்பு இந்தியா குறித்த கவனம் ஆகியவை தொடர்பாகவும், இணைச்செயலாளர் விவரித்தார்.

திவாஹர்

Leave a Reply