தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கால்பந்து வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு முதல்வர் நேரில் பாராட்டு தெரிவித்தார். பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற 27ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் – 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து, கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
சி.கார்த்திகேயன்