தான்சானியா-சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸ் வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது; இந்தியாவுக்கு வெளியே முதலாவது ஐஐடி வளாகம் அமைக்கப்படவுள்ளது.

தான்சானியா- சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸ் வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய கல்வி அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ்,  தான்சானியா-சான்சிபாரின் கல்வி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சகம் இடையே வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், சான்சிபார் அதிபர் டாக்டர் ஹூசைன் அலி வின்இ முன்னிலையில் கையெழுத்தானது; இது இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்படவுள்ள முதலாவது ஐஐடி வளாகம் ஆகும். இந்தியா-தான்சானியா இடையே நிலவும் நீண்டகால நட்பை இது பிரதிபலிப்பதாகவும் ஆப்பிரிக்கா மற்றும் உலகின் தென்பகுதிகளில் மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையிலான இந்தியாவின் கவனத்தை நினைவுகூரும் வகையிலும் அமைந்துள்ளது.

அப்போது பேசிய மத்திய கல்வி, திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஐஐடி மெட்ராஸ்-சான்சிபார் வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உயர்கல்வியை சர்வதேச மயமாக்கலையொட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கம் என்று தெரிவித்தார்.

தான்சானியாவுக்கான இந்திய துணைத்தூதர் திரு பினயா ஸ்ரீகந்தா பிரதான், ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் ரகுநாதன் ரங்கசாமி, சான்சிபார் கல்வி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சகத்தின் முதன்மைச்  செயலாளர் திரு காலித் மசூத் வசீர் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply