சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ஜெ.ஜெயலலிதா, அரசியல் விவகாரங்களை தூண்டி விட்டால், அவரது ஜாமீனை ரத்து செய்ய நான் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்வேன் எனவும், உடல்நலம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இது சுப்ரீம் கோர்ட் உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், சுப்ரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் 18.12.2014 அன்று குறிப்பிட்டுள்ளார்.
உடல் நலம் குறித்த காரணத்தை குறிப்பிட்டுதான் ஜாமீன் கேட்டார்கள். ஆனால், அரசியல் பேசக்கூடாது என்றோ, அரசியலில் ஈடுப்படக்கூடாது என்றோ, வீட்டுக் காவலில்தான் இருக்க வேண்டும் என்றோ, வெளியில் எங்கும் செல்லக் கூடாது என்றோ ஜெ.ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
சுப்ரீம் கோர்ட் ஜெ.ஜெயலலிதாவுக்கு வழங்கிய ஜாமீன் உத்தரவில், இருநபர் உத்தரவாதத்தைத் தவிர, எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
ஜெ.ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஜாமீன் உத்தரவை பார்த்தாலே, சுப்ரமணியன் சுவாமியின் பொய்யும், பித்தலாட்டமும் தெரியும்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரம் அனைத்தும் தன் பாக்கெட்டில் இருப்பதைப் போல, சுப்ரமணியன் சுவாமி பிதற்றி வருகிறார். சுப்ரீம் கோர்ட் உத்தரவில் இல்லாத ஒன்றைச் சொல்லி ஜெ.ஜெயலலிதாவை சுப்ரமணியன் சுவாமி மிரட்டி வருகிறார். இது அவதூறு மட்டுமல்ல, நீதி மன்ற அவமதிப்பாகும்.
ஜெ.ஜெயலலிதாவின் அமைதியையும், பொறுமையையும், அவரது அரசியல் எதிரிகளும், சுப்ரமணியன் சுவாமி போன்ற தரகர்களும் தவறாக புரிந்து கொண்டு மக்களை திசைத்திருப்பப் பார்க்கிறார்கள்.
இதையெல்லாம் பார்க்கும்போது “யானைக்கு உடம்பு சரியில்லை என்றால், எறும்பு விளையாட வருகிறாயா? என்று கேட்குமாம்” என்ற பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in