ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் 87 கி.மீ. தூரத்திற்கு ரூ.2,900 கோடி மதிப்பிலான 3 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த திட்டங்களுக்கு பிரபலமான நேலாபட்டு பறவைகள் சரணாலயம், ஸ்ரீஹரிகோட்டா சத்தீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் போன்றவற்றுடன் இணைப்பு இருப்பதால் சுற்றுலாத்துறை ஊக்கமடையும் என்றார். இதன் மூலம் கணிசமான அளவு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் ஸ்ரீகாலஹஸ்தியில் உள்ள சிவாலயம் ஆகியவற்றுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளையும் இந்த திட்டங்கள் மேம்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு முழுவதும் விரைவான,தடையில்லாத, எரிசக்தி சேமிப்பு உள்ள போக்குவரத்திற்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று திரு நிதின் கட்கரி கூறினார்.
திவாஹர்