மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று டேராடூனில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மத்திய கவுன்சிலின் 15-வது மாநாட்டை தொடங்கிவைத்தார். இந்த மாநாட்டில் இரண்டு நாள் ஸ்வாஸ்திய சிந்தனை அமர்வு கூட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம்சிங் தமாங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர்கள் டாக்டர் பாரதி பிரவீன் பவார், பேராசிரியர் எஸ்பி சிங் பாகல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன், புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் திரு கே லட்சுமிநாராயணன், உத்தரகாண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் திரு தன்சிங் ராவத், ஆந்திரா சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி ரஜினி விடாதலா, கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு தினேஷ் குண்டுராவ், உட்பட பல்வேறு மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தொடக்கவுரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்த சிந்தனை அமர்வு, மருத்துவத்துறையில் பல்வேறு விஷயங்களுக்கான வாய்ப்பை வழங்கும் என்று கூறினார். இந்த அமிர்தகாலத்தில் நமது சொந்த அறிவிலிருந்து உத்வேகம் பெறவேண்டும். தொழுநோய், காசநோய், அரிவாள்செல் ரத்தசோகை போன்ற நோய்களிலிருந்து மக்களை விடுவிக்க நாம் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த நோய்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் பிரதமரின் ஜன்ஆயுஷ் அட்டைகளை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல்வேறு மாநில அமைச்சர்களை உத்தரகாண்ட மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் வரவேற்றார்.
திவாஹர்