ரயில்வே பாதுகாப்புப் படை கடந்த ஜூன் மாதம் நாடு முழுவதும் ரயில்வேயின் சொத்துக்களை பாதுகாக்கும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.
ரயில்வே சொத்துக்களை திருடுவது மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்வது ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரயில்வேயின் திருட்டு உடமைகளை வாங்குபவர்கள் மீதும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த வகையில் நாடு முழுவதும் ரயில்வே பாதுகாப்புப்படையால், ரயில்வேயின் திருட்டு சொத்துக்களை வாங்கிய 90 பேர் கைது செய்யப்பட்டு, 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரூ.5.7 லட்சம் மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டன.
ரயில்வே பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 493 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 484 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ரயில் பயணிகளின் உடமைகளை திருடியதுடன், கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களாவார்கள். மேலும் சட்டவிரோத ரயில் டிக்கெட்களை விற்றது, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதும் இதில் அடங்கும்.
எம்.பிரபாகரன்