தக்காளி விலையை குறைக்கும் வகையில், 2023, ஜூலை 20 முதல் சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.70-க்கு தக்காளியை விற்பனை செய்ய இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு நுகர்வோர் விவகாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம் கொள்முதல் செய்யும் தக்காளி சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு பின்னர் அது 2023, ஜூலை 16 முதல் ரூ.80-ஆக குறைக்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளி விலையை 70 ரூபாயாக குறைப்பதன் மூலம் நுகர்வோர்கள் மேலும் பயனடைவார்கள்.
ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் உள்ள மண்டிகளிலிருந்து இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு நிறுவனம், தக்காளியை கொள்முதல் செய்து கடந்த ஒரு மாதமாக விலை அதிகரித்த பெருமளவு நுகர்வோர் எண்ணிக்கையைக் கொண்ட மையங்களுக்கு அனுப்பப்பட்டது.
தில்லியில் தக்காளி சில்லறை விற்பனை 2023 ஜூலை 14 அன்று தொடங்கியது.
திவாஹர்