தூத்துக்குடி, தெற்கு காட்டன் தெருவில், பூட்டிய வீட்டிற்குள் துணி சலவை இயந்திரத்தில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
அருகிலிருப்பவர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தந்தனர். தீயணைப்பு வீரர்கள் பூட்டிய வீட்டைத் திறந்து 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து உடனே தகவல் கிடைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
– பி.கணேசன்@ இசக்கி.