புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் தேசிய புவி அறிவியல் விருதுகள் – 2022 ஐ குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நிலக்கரி, 2023 ஜூலை 24 அன்று வழங்கவுள்ளார். மத்திய சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, சுரங்கம், நிலக்கரி மற்றும் இரயில்வே துறை இணை அமைச்சர் திரு ராவ்சாகேப் பாட்டீல் தன்வே ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். சுரங்க அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று பிரிவுகளில் தேசிய புவி அறிவியல் விருதுகளை வழங்குகிறது:
- வாழ்நாள் சாதனைக்கான தேசிய புவி அறிவியல் விருது,
- தேசிய இளம் புவியியலாளர் விருது
- புவியியல் துறையின் பல்வேறு துறைகளில் தேசிய புவி அறிவியல் விருது.
1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய புவி அறிவியல் விருதுகள் (என்.ஜி.ஏ), புவி அறிவியல் துறையில் சிறந்த, அர்ப்பணிப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்திய சிறப்புமிக்க தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கான அடையாளமாகும்.
கனிம கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வு, அடிப்படை புவி அறிவியல், பயன்பாட்டு புவி அறிவியல் மற்றும் சுரங்கம், கனிம வளம் மற்றும் நிலையான கனிம மேம்பாடு ஆகிய துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு என்.ஜி.ஏ 2022 க்கு, பல்வேறு விருது பிரிவுகளின் கீழ் 168 பரிந்துரைகள் பெறப்பட்டு மூன்று கட்ட பரிசீலனை செயல்முறை மூலம் பரிசோதிக்கப்பட்டன. பரிந்துரைக்கப்பட்டவர்களில் வாழ்நாள் சாதனையாளருக்கு ஒரு தேசிய புவி அறிவியல் விருது, பல்வேறு துறைகளின் கீழ் எட்டு தேசிய புவி அறிவியல் விருதுகள், ஒரு தேசிய இளம் புவியியலாளர் விருது என பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 தேசிய புவி அறிவியல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர். இந்த 10 என்ஜிஏ விருதுகள் 22 புவியியலாளர்களுக்கு குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
வாழ்நாள் சாதனையாளருக்கான தேசிய புவி அறிவியல் விருது, கடந்த நான்கு தசாப்தங்களாக இமயமலையில் முன்னோடியாக பணியாற்றியதற்காக நன்கு அறியப்பட்ட டாக்டர் ஓம் நாராயண் பார்கவாவுக்கு வழங்கப்பட உள்ளது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் அமியா குமார் சமலுக்கு தேசிய இளம் புவியியலாளர் விருது வழங்கப்பட உள்ளது.
தேசிய புவி அறிவியல் விருதுகள் புகழ்பெற்ற புவியியலாளர்கள், அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் முன்னிலையில் ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும்.
எஸ்.சதிஸ் சர்மா