கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க ஏதுவாக, மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளின் விளைவாக, 2020-21 சர்க்கரை பருவம் வரை சுமார் 99.9 சதவீத கரும்பு நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. முந்தைய 2021-22 சர்க்கரை பருவத்தில், 99.9 சதவீத்ததுக்கும் அதிகமான கரும்பு நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு 2022-23 சர்க்கரை பருவத்தில், 17.07.2023 நிலவரப்படி சுமார் 91.6 சதவீத கரும்பு நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்குவது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கரும்பு நிலுவைத் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சர்க்கரை ஆலைகளின் கரும்பு விலை நிலவரத்தை காலமுறை அடிப்படையில் கண்காணிக்கவும், பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகள் யூனியன் பிரதேசங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பு கரும்புப் பருவத்தில் 17.07.2023 நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் வழங்கப்பட வேண்டிய தொகை ரூ 3708 கோடி ஆகும். அதில் ரூ. 3564 கோடி வழங்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகை ரூ. 144 கோடி ஆகும்.
இத்தகவலை நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
திவாஹர்