இந்தியாவின் முதல் கஞ்சா மருந்து திட்டத்திற்கு முன்னோடியாக ஜம்மு.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை  (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் முதல் கஞ்சா மருத்துவத் திட்டத்திற்கு ஜம்மு முன்னோடியாக உள்ளது என்று கூறினார்.

சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் ஜம்முவின் ‘கஞ்சா ஆராய்ச்சி திட்டம்’ இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், ஒரு கனடா நிறுவனத்துடன் தனியார் பொது கூட்டாண்மையில் தொடங்கப்பட்டது, இது மனிதகுலத்தின் நன்மைக்காக குறிப்பாக நரம்பியல், புற்றுநோய், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயனளிக்கும்  பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

ஜம்முவுக்கு அருகிலுள்ள சாத்தாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தின் கஞ்சா சாகுபடி பண்ணைக்கு விஜயம் செய்த டாக்டர் ஜிதேந்திர சிங், நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கஞ்சா பயிரிடும் நடைமுறைகள் மற்றும் இந்த முக்கியமான தாவரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி பணிகள் பற்றிய நேரடி தகவல்களைப் பெற்ற பின்பு இதைக் கூறினார்.

சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.எம் இன் இந்த திட்டம் தற்சார்பு இந்தியா  கண்ணோட்டத்தில் முக்கியமானது, ஏனெனில் அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகு, பல்வேறு வகையான நரம்பியல் நோய்கள், நீரிழிவு போன்றவற்றிற்கான ஏற்றுமதி தரமான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும் என்று அமைச்சர் கூறினார்.

டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் ஆகியவை போதைப்பொருள் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த வகையான திட்டம் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டுள்ளது என்ற விழிப்புணர்வை குறிப்பாக புற்றுநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே பரப்பும் என்றார்.

சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் மற்றும் இண்டஸ்ஸ்கான் இடையே அறிவியல் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது ஜம்மு காஷ்மீருக்கு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

இந்த வகையான திட்டம் ஜம்மு-காஷ்மீரில் பெரும் முதலீட்டிற்கு உத்வேகம் அளிக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.

இந்த திட்டத்திற்காக சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.எம்-ஐப் பாராட்டிய டாக்டர் ஜிதேந்திர சிங், சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் இந்தியாவின் பழமையான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாகும், 1960 களில் புதினாவைக் கண்டறிந்த வரலாற்றைக் கொண்டுள்ளது, ஊதா புரட்சியின் மையமாகும், இப்போது சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.எம் இன் கஞ்சா ஆராய்ச்சித் திட்டம் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் மிகவும் மதிப்புமிக்கதாக மாறும் என்றார்.

களப்பயணத்தின் போது, சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.ஐ.ஐ.எம் தற்போது கஞ்சா  சாகுபடியை பெரிய அளவில் செய்து வரும் பாதுகாக்கப்பட்ட பகுதியை டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.

டாக்டர் ஜிதேந்திர சிங், கஞ்சாவின் சிகிச்சை பண்புகளை ஆராய்வதில் முன்னோடி ஆராய்ச்சிக்காக சி.எஸ்.ஐ.ஆர்-ஐ.எம் இன் முயற்சிகளை பாராட்டினார்.

விவசாயிகளுக்கு உதவும் விளைபொருட்களை அதிகரிப்பதற்கான சமீபத்திய தொழில்நுட்பத்தையும் சாகுபடி முறைகளையும் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். டாக்டர் ஜிதேந்திர சிங் நமது நாட்டின் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ற புதிய உள்நாட்டு வகைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இந்த முயற்சியில் பயோடெக்னாலஜியின் பங்கை எடுத்துரைத்த அவர், அறிவியல் வளர்ச்சியின் எல்லைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்தார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், கஞ்சா ஒரு அதிசய தாவரமாகும், இதில் குமட்டல் மற்றும் வாந்திக்கு சிகிச்சையளிக்க மரில்னோல் / நரம்பியல் வலிப்பு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள் தயாரிக்கப்படுவதாக கூறினார்.

திவாஹர்

Leave a Reply