2023 மே மாதத்திற்கான சுரங்கம் மற்றும் குவாரித் துறையின் கனிம உற்பத்தி குறியீடு (அடிப்படை: 2011-12 = 100) 128.1 ஆக உள்ளது, இது 2022 மே மாத அளவோடு ஒப்பிடும்போது 6.4% அதிகமாகும். இந்திய சுரங்க பணியகத்தின் (ஐபிஎம்) தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, 2022-23 ஏப்ரல் முதல் மே வரையிலான காலத்திற்கான ஒட்டுமொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 5.8% சதவீதமாகும்.
2023 மே மாதத்தில் முக்கியமான கனிமங்களின் உற்பத்தி அளவு: நிலக்கரி 762 லட்சம் டன், பழுப்பு நிலக்கரி 35 லட்சம் டன், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன், இரும்புத் தாது 253 லட்சம் டன் , சுண்ணாம்புக்கல் 387 லட்சம் டன், இயற்கை எரிவாயு ( பயன்படுத்தப்பட்டது) 2838 மில்லியன் கன மீட்டர், பாக்சைட் 2386000, குரோமைட் 372000, தாமிரம் 9000, ஈயம் 33000, மாங்கனீஸ் தாது 329000, துத்தநாகம் 133000, பாஸ்போரைட் 140000, மாக்னசைட் 11000 டன்கள், தங்கம் 97 கிலோ .
2022 மே மாதத்தை விட 2023 மே மாதத்தில் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டும் முக்கிய கனிமங்கள் பின்வருமாறு: மாங்கனீசு தாது (40.4%), மேக்னசைட் (28.2%), தாமிரம் (24.4%), குரோமைட் (16.3%), இரும்புத் தாது (13.6%), சுண்ணாம்புக்கல் (10.1%), ஈயம் (9.7%), நிலக்கரி (7%), பாக்சைட் (7%). அதே நேரத்தில், எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டும் பிற முக்கிய கனிமங்கள் பின்வருமாறு: இயற்கை எரிவாயு (0.3%), பெட்ரோலியம் (கச்சா) (-1.9%), பாஸ்போரைட் (-6.3%) மற்றும் பழுப்பு நிலக்கரி (-17.7%).
எஸ்.சதிஸ் சர்மா