இந்திய ரயில்வேயால் 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன.

30.06.2023 நிலவரப்படி, இந்திய ரயில்வேயின் அகல ரயில் பாதை வலையமைப்பின் 59,096 வழித்தட கிலோமீட்டர்கள் (ஆர்.கே.எம்) மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 37,011 ஆர்.கே.எம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. மாநில / யூனியன் பிரதேச வாரியான மின்மயமாக்கல் விவரங்கள் பின்வருமாறு:

வரிசை எண். மாநிலம்/ யூனியன் பிரதேசம் 30.06.2023 நிலவரப்படி மின்மயமாக்கப்பட்ட BG RKM
1 சண்டிகர் 16
2 சத்தீஸ்கர் 1,199
3 டெல்லி 183
4 ஹரியானா 1,701
5 இமாச்சலப் பிரதேசம் 67
6 ஜம்மு & காஷ்மீர் 298
7 ஜார்க்கண்ட் 2,558
8 மத்தியப் பிரதேசம் 4,822
9 மேகாலயா 9
10 ஒடிசா 2,822
11 புதுச்சேரி 21
12 தெலங்கானா 1,858
13 உத்தரப் பிரதேசம் 8,482
14 உத்தரகண்ட் 347
15 பீகார் 3,614
16 ஆந்திரப் பிரதேசம் 3,841
17 தமிழ்நாடு 3,659
18 மகாராஷ்டிரா 5,441
19 மேற்கு வங்காளம் 3,682
20 கேரளா 947
21 குஜராத் 3,435
22 பஞ்சாப் 1,915
23 ராஜஸ்தான் 4,387
24 கோவா 147
25 கர்நாடக 2,844
26 அசாம் 801
27 அருணாச்சலப் பிரதேசம்
28 மணிப்பூர்
29 மிசோரம்
30 நாகாலாந்து
31 திரிபுரா
  மொத்தம் 59,096

பின்வரும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தற்போதுள்ள அகல ரயில்பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன:

வரிசை எண். மாநிலம்/யூனியன் பிரதேசம் வரிசை எண். மாநிலம்/யூனியன் பிரதேசம்
1 சண்டிகர் 8 மத்தியப் பிரதேசம்
2 சத்தீஸ்கர் 9 மேகாலயா
3 டெல்லி 10 ஒடிசா
4 ஹரியானா 11 புதுச்சேரி
5 இமாச்சலப் பிரதேசம் 12 தெலங்கானா
6 ஜம்மு & காஷ்மீர் 13 உத்தரப் பிரதேசம்
7 ஜார்க்கண்ட் 14 உத்தரகண்ட்

ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply