ஆர்.சி.எஸ்-உடான் மூலம் 123 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர்
30.06.2023 நிலவரப்படி, மண்டல இணைப்புத் திட்டம் – உடான் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட விமான ஆபரேட்டர்களுக்கு பிராந்திய விமான இணைப்பு நிதி அறக்கட்டளையிலிருந்து (ஆர்.ஏ.சி.எஃப்.டி) ரூ.2729.11 கோடி சாத்தியக்கூறு இடைவெளி நிதி (வி.ஜி.எஃப்) விடுவிக்கப்பட்டுள்ளது.
உடான் திட்டத்தின் கீழ் நான்கு சுற்று ஏலத்தின் அடிப்படையில், 2 நீர் விமான நிலையங்கள் மற்றும் 9 ஹெலிபோர்ட்கள் உட்பட 74 விமான நிலையங்களை இணைக்கும் 479 வழித்தடங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் 123 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர்.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கணிசமாக வளர்ச்சியடையும். வளர்ச்சியின் சில பகுதிகள் பின்வருமாறு:
i. நாட்டில் 21 கிரீன்பீல்டு விமான நிலையங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதில், 11 கிரீன்பீல்டு விமான நிலையங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆறு விமான நிலையங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2. தொழில்துறை கணிப்புகளின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுக்கு 1000 விமானிகள் தேவைப்படலாம். நாட்டில் விமானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) பறக்கும் பயிற்சி அமைப்பு கொள்கையை தாராளமயமாக்கியுள்ளது.
iii. தொழில்துறை கணிப்புகளின்படி, முக்கிய உள்நாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் 900 க்கும் மேற்பட்ட சேர்க்கைகளைச் செய்ய வாய்ப்புள்ளது.
4. இத்திட்டத்தின் போது 1000 உடான் வழித்தடங்களை செயல்படுத்தவும், 2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் சேவையற்ற 100 விமான நிலையங்கள் / ஹெலிபோர்ட்கள் / நீர் விமான நிலையங்களை புதுப்பிக்க / மேம்படுத்தவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. உடான் என்பது சந்தை சார்ந்த ஒரு திட்டமாகும், அங்கு அதிக இடங்கள் / நிலையங்கள் மற்றும் வழித்தடங்களை உள்ளடக்கிய ஏல சுற்றுகள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. குறிப்பிட்ட வழித்தடங்களில் தேவை குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில், ஆர்வமுள்ள விமான நிறுவனங்கள் உடான் திட்டத்தின் கீழ் ஏலத்தின் போது தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கின்றன. உடானின் அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்களில் சேர்க்கப்பட்டு, உடான் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு மேம்படுத்தல் / மேம்பாடு தேவைப்படும் ஒரு விமான நிலையம், ‘ சேவையற்ற விமான நிலையங்களின் மறுமலர்ச்சி’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிறது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெனரல் (டாக்டர்) வி.கே.சிங் (ஓய்வு) இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
திவாஹர்