அதிக மாசுபட்ட நகரங்களில் துகள்களை உறிஞ்ச, பேருந்து கூரை மீது பொருத்தப்படும் காற்று சுத்திகரிப்பு அமைப்புகளின் செயல் திறனை அரசு ஆராய்ந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

அதிக மாசுபட்ட நகரங்களில் துகள்களை உறிஞ்ச பேருந்து கூரை மீது பொருத்தப்படும் காற்று சுத்திகரிப்பு அமைப்புகளின் (பி.ஆர்.எம்.ஏ.பி.எஸ்) செயல் திறனை அரசு ஆராய்ந்து வருவதாக , மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தில்லி தேசிய தலைநகர் பகுதியில் தூசியை வடிகட்ட 30 பேருந்துகளின் மேற்கூரையில் பரீட்சார்த்தமாக வடிகட்டும் அலகுகள் நிறுவப்பட்டுள்ளன என்றார்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் – காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-சி.இ.சி.ஆர்.ஐ) மற்றும் நாக்பூரில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர்-நீரி) ஆகியவை சென்னை, தில்லி, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய ஆறு நகரங்களில் காற்று மாசுபாடு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply