சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பழைய வாகன உடைப்புக் (ஸ்கிராப்பிங்) கொள்கையை உருவாக்கியுள்ளது, இது நாடு முழுவதும் பழைய, தகுதியற்ற மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக அகற்றுவதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான ஊக்கத்தை வழங்கும் முறையை உள்ளடக்கியது. கொள்கையின் விதிகளை செயல்படுத்துவதற்காக, பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன:-
(1) 23.09.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 653 (ஈ) தொடர்பான அறிவிப்பு செப்டம்பர் 25, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
(2) 23.09.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 652 (ஈ) தானியங்கி சோதனை நிலையங்களை அங்கீகரித்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. இந்த அறிவிப்பு செப்டம்பர் 25, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
(3) 04.10.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 714 (ஈ) வாகனங்களின் பதிவு கட்டணம், தகுதி சோதனை கட்டணம் மற்றும் தகுதி சான்றிதழ் கட்டணத்தை உயர்த்த வழிவகுக்கிறது. இந்த அறிவிப்பு 2022 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
(4) 05.10.2021 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 720 (ஈ) “வைப்புச் சான்றிதழை” சமர்ப்பிப்பதற்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கான மோட்டார் வாகன வரியில் சலுகையை வழங்குகிறது. இந்த அறிவிப்பு 2022 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
(5) 05.04.2022 தேதியிட்ட ஜி.எஸ்.ஆர் அறிவிக்கை 272 (ஈ) மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் விதி 175 இன் படி பதிவு செய்யப்பட்ட தானியங்கி சோதனை நிலையத்தின் மூலம் மட்டுமே மோட்டார் வாகனங்களின் கட்டாய தகுதியை வழங்குகிறது.
திவாஹர்