பட்டாசுக் கடைகளில் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

ஜி.கே.வாசன்.

தமிழக அரசு, இனிமேல் பட்டாசு ஆலைகள், பட்டாசுக் கிடங்குகள்.

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் தனியார் பட்டாசுக் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. வேதனைக்குரியது. மேலும் சுமார் 10 பேர் படுகாயமடைந்திருப்பதும் வருத்தத்துக்குரியது.

காயமடைந்தவர்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளித்து, விரைவில் குணமடைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வப்போது பட்டாசுக் கிடங்கில் வெடி வழக்கமாகிவிட்டது. இது தவிர்க்கப்பட வேண்டும். விபத்து ஏற்படுவது குறிப்பாக பட்டாசு ஆலை சம்பந்தமாக, பட்டாசுக் கிடங்கு சம்பந்தமாக உள்ள விதிமுறைகள் சரியாக, முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் தமிழக அரசு தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும். அப்போது தான் பட்டாசு ஆலை, பட்டாசுக் கிடங்கு ஆகியவற்றில் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.

பட்டாசுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் நலனையும், பட்டாசுத் தொழிலையும் பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.மா.கா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்ச நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும் காயமடைந்தவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் இனிமேல் பட்டாசு ஆலைகள் பட்டாசுக் கிடங்குகள், பட்டாசுக் கடைகள் ஆகியவற்றில் விபத்துக்கள் நிகழாமல் இருக்க, உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply