தி.மு.க. அரசின் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் 1000 (ஆயிரம் ரூபாய் ) வழங்க 2023-24 நிதியாண்டுக்கு 7000 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கணிசமான தொகையை மத்திய அரசின் உதவியுடன் *ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்க்காக ஒதுக்கப்படும் சிறப்பு உட்கூறு திட்ட நிதியிலிருந்து மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இரா.அன்புவேந்தன், தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திடம் விசாரணை செய்யக் கோரியும், நிதியை திரும்பப் பெற்றிடவும் 27-07-2023 அன்று புகார் அளித்தார்.
இந்நிலையில், ஆதி திராவிடர் நலத்துறைக்கான சிறப்பு நிதி, மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்திற்கு மாற்றப்பட்டதா? என்பது குறித்து, 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். தவறினால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்படும் என, தமிழக அரசுக்கு, தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளார்.
இதனால் மகளிர் உதவி தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040