உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள்.

உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை குறைப்பதிலும் அரசு கவனம் செலுத்துகிறது. நாட்டின் பெரும்பாலான நிலக்கரித் தேவை உள்நாட்டு உற்பத்தி  மற்றும் வழங்கல் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 14.77% அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஜூன், 2023 வரை, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 8.51 சதவீதம் அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

2013-14-ம் ஆண்டில் 565.765 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி 2022-23-ல் 893.190 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 

நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கான புதிய பகுதிகளை ஆய்வு மூலம் கண்டுபிடிப்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியின் புதிய பகுதிகளை ஆய்வு செய்வதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் மத்திய துறை திட்டத்தின் மூலம் ஊக்குவிப்பு (பிராந்திய) ஆய்வு என்ற ஒரு துணைத் திட்டம் தொடர்கிறது. இதுதவிர, நிலக்கரி உள்ளிட்ட கனிமங்கள் குறித்த ஆய்வுகளையும் இந்திய புவியியல் ஆய்வு மையம் மேற்கொள்கிறது.

வெளிச்சந்தையில் விற்பனை செய்ய துணை நிறுவனங்களை உருவாக்குவதற்குப் பதிலாக தனிப்பட்ட நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான எந்தவொரு திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை.

தற்போது, நிலக்கரியின் தரத்தின் அடிப்படையில் நிலக்கரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இறுதி பயன்பாட்டிற்கு தேவையான நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு நிலக்கரி தரங்களுக்கான விலை நிர்ணய பொறிமுறைக்கான எந்த முன்மொழிவும் இல்லை.

இத்தகவலை மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

திவாஹர்

Leave a Reply