நாடு முழுவதும் உள்ள ராணுவ மையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மின்சார வாகனங்களை படிப்படியாக அறிமுகப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர ராணுவம் திட்டமிட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்துவது, பசுமை எரிசக்திக்கு உத்வேகம் அளிப்பது மற்றும் புதைபடிவ எரிபொருட்களை சார்ந்திருப்பதைக் குறைப்பது ஆகியவை இதன் நோக்கங்களாகும். ராணுவம் நாடு முழுவதும் பின்வரும் வகைகளில் மின்சார வாகனங்களை கொள்முதல் செய்து பயன்படுத்த தொடங்கியுள்ளது.
- இலகுரக வாகனங்கள்
- பேருந்துகள்
- இரு சக்கர வாகனங்கள்
இத்தகவலை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு அஜய் பட் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா